வசந்தபாலனின் அரவான் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட சரித்திரப்படம். அது சரியாகப் போகவில்லை. தற்போது அவர் இயக்கிவரும் காவியத்தலைவனும் சரித்திரப்படமே.
தமிழ்ச் சினிமாவின் முன்னோடிகளான நாடகக்கலைஞர்களின் தந்தையென போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நடத்திய நாடகக் குழுபோன்றதொரு குழுவும் அதில் நடிகர் கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்.ஆர்.ராதா போன்ற பழம்பெரும் திரைப்படக்
கலைஞர்கள் தங்களது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்ததுமான காலகட்டத்ததையும், நாடகக்குழுவையும் மையமாகக் கொண்டது இப்படத்தின் கதை.
இந்தப் பழம்பெரும் நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டம் என்பதால் மிகுந்த சிரமப்பட்டு அந்தக்கால நாடக கொட்டகை, அலங்காரப் பொருட்கள், மனிதர்களின் உடையலங்காரம்,பேச்சு என்று மெனக்கெட்டுள்ளார்கள்.
பழங்கால நாடகக்கொட்டகை செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்திவருகிறார்கள். படத்தில் நடிக்கும் நடிகர்கள் பெரும்பாலோனோர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் எனப்படும் நாடகக் கலைஞர்களே. ஓய் நாட் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில்
ஏராளமான நாடகக்கலை மேக்கப் கலைஞர்கள் பணியாற்றிவருகிறார்கள்.