இந்தியிலிருந்து தமிழுக்கு அறிமுகமான சமீரா ரெட்டி கௌதம் மேனனின் படம் வாரணம் ஆயிரம் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தார். மார்க்கெட் டல்லானவுடன் தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்தார்.
கன்னடத்தில் வரதநாயகா என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டார். இரண்டே மாதங்கள் தான் குடும்ப வாழ்க்கை. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
தற்போது ஹிந்தியில் ‘நாம்’ என்கிற படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக அல்ல. இதே போல இன்னும் இரண்டு கன்னடப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாயிருக்கிறாராம். திருமணமாகிவிட்டால் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு ஏன் பறிபோய்விடுகிறது பெரும்பாலான நடிகைகளுக்கு? யாராவது பி.எச்.டி மாணவர்கள் இதை ஆராய்ச்சி செய்யலாமே