shankar-i-movie-news

விக்ரம் – எமி ஜாக்சன் நடிக்கும் ஷங்கரின் ‘ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஒரே ஒரு பாட்டு மட்டும் இன்னும் எடுக்கப்படாமல் இருக்கிறது. மே மாத இறுதியில் படம் வெளியாகவிருந்தது படத்தயாரிப்பு வேலைகள் முடியாததால் ஜூன் மாதத்திற்குப் போகலாம் என்கிறார்கள்.

இந்தியாவின் ஒலிம்பிக் கனவு என்கிற இத்துப் போன கனவை பூதாகாரப் படுத்தி காதல், காமெடி மசாலா கலந்து கொஞ்சம் தேசபக்தி ரெடிமேட் மிக்ஸைத் தூவி சுடச்சுட வரப்போகும் இந்தப் படத்திற்கு விக்ரமுக்கு ஸ்பெஷல் மேக்கப் போடுபவர்கள் ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’, ‘ஹாபிட்’ போன்ற படங்களுக்கு மேக்கப் போட்டவர்களான நியூசிலாந்தைச் சேர்ந்த வேட்டா ஸ்டுடியோவினர்.

சுரேஷ்கோபி, சந்தானம், பவர் ஸ்டார் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஐ’ பட பாடல்களை கனடாவில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதில் விக்ரமுக்கு மிக ஒல்லியாக இருப்பவர் போலவும், நல்ல திடகாத்திரமாக இருப்பவர் போலவும் இரண்டு வேடங்கள். இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த வோட்டா ஸ்டுடியோவினர் ஷங்கரின் மேக்கிங் மேல் கொஞ்சம் கூடுதலாகவே மதிப்பு கொண்டிருக்கிறார்களாம். ஷங்கருக்கு ஜீன்ஸில் ஆரம்பித்த கிராஃபிக்ஸ் மோகம் போகப் போக கூடிக்கொண்டேதான் போகிறது. படத்துக்கு படம் கிராஃபிக்ஸூக்காக அவர் செய்யும் மெனக்கெடல்களும் கூடிக்கொண்டே போவதையும் கவனியுங்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.