நடிகை ஸ்ருதி தனது கவர்ச்சிகரமான நடிப்பால் சமீபத்தில் பாலிவுட்டை கலக்கினார். இந்தியில் வெளியான டி டே படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்ததோடு கவர்ச்சியும் காட்டியிருந்தார். அவருக்கு ஹிந்தியில் மார்க்கெட் சூடு பிடித்தபடி நிற்கிறது.
அடுத்தபடியாக அல்லு அர்ஜூனாவுடன் தெலுங்கில் நடித்து வரும் படம் ரேஸ் குர்ரம். இதை இயக்கியிருப்பவர் சுரேந்தர் ரெட்டி. இந்தப் படத்தின் போஸ்டரை படத்தின் இசையமைப்பாளர் தமன் ப்ளாக்கில் வெளியிட அது சர்ரென்று இன்டர்னெட்டில் பற்றி எரிகிறது.
அந்தப் போஸ்டரில் அல்லு அர்ஜூன் மல்லாந்து சர்க்கஸ்காரர் போல வளைந்திருக்க அவர் மேல் சம்மணமிட்டு தவக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ருதி. இதைப் பற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது ‘இது அதிக கவர்ச்சியா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை.
படத்தில் இயக்குனருக்கு இப்படி ஒரு காட்சி தேவைப்பட்டது அது போல் நடித்துக் கொடுத்தேன். மற்றபடி இது மிக கவர்ச்சியாக இருப்பதா என்பது பற்றி நான் பார்க்கவில்லை’ என்று கூலாக பதில் சொல்கிறார் ஸ்ருதி.
இது போன்ற எண்ணற்ற ஹீரோயின்களை நன்றாக் ஆடைகளை உரித்து ஆடவைத்துப் பார்க்கும் தெலுங்கு சினிமா கூடிய சீக்கிரமே அந்த நடிகைகளை தூக்கியும் எறிந்துவிடும் என்பது ஸ்ருதிக்கு தெரியாதோ? கவர்ச்சியில் மட்டும் பொளந்து கட்டினால் பத்தாதது.
நடிப்புத் திறமையினால் மட்டுமே சினிமாவில் நீண்டநாள் நிலைக்க முடியும் என்கிற உண்மையை அப்பா கமல்ஹாசனிடமிருந்தாவது கற்றுக்கொள்வாரா ஸ்ருதி?