இயக்குனர் பால்கி என்கிற பாலகிருஷ்ணனின் பெயரிடப்படாத புதிய படத்தில் அமிதாப் பச்சனும், தனுஷூம் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தில் தனுஷ்ஷின் ஜோடியாக நடித்து திரையுலகில் நுழைய இருக்கிறார் கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா.
படத்துக்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா. பால்கியின் சினிமா ஆர்வத்துக்கே இவருடைய இசை தான் காரணம் என்று பால்கி எப்போதும் சொல்வாராம். ராஜாவின் இசைமேல் அவ்வளவு ஈடுபாடு கொண்டவர் பால்கி. அவரது விருப்பப்படியே இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டாராம். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
இதற்காக இளையராஜா அமைத்துள்ள பாடல் ஒன்றை ஸ்ருதிஹாசன் பாடியிருக்கிறார். தங்கைக்காக அக்கா குரல் கொடுக்கிறார். ஸ்ருதிஹாசன் சிறுவயதில் ‘போற்றிப் பாடடி பொண்ணே’ என்று தேவர் மகன் படத்தில் ராஜாவின் இசையில் தான் முதன் முதலாக பாடினார். இப்போது மீண்டும் ராஜாவின் இசையி்ல் பாடியிருக்கிறார்.