பிள்ளைகளை இப்படிக் கொஞ்சி வளர்க்கும் பெற்றோர்களே பிற்காலத்தில் அவர்கள் காதல் வயப்படும்போது எதிரிகளாகி நிற்கிறார்கள். அப்படி பெற்றோர்களால் கலைக்கப்பட்ட ஒரு காதலைப் பற்றிய கதைதான் தங்கமே வைரமே.
புதுமுகங்கள் தமிழ்மணி, சந்திரா, நட்சத்திரா, வாகிணி நடிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் சூரியகுமாரன் எழுதி இயக்குகிறார். “நிர்ப்பந்தங்கள் எல்லாருடைய வாழ்விலும் உண்டு. ஆனால் உறவுகளும், நட்புகளும் எனக்காக அதைச் செய், இதை
விட்டுவிடு என நிர்ப்பந்தம் வைக்கும்போது அதை அன்பின் காரணமாக தட்டமுடிவதில்லை.
இதுபோன்ற ஒரு சூழலில் பெற்றோருக்காக காதலியைத் துறந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் ஒரு இளைஞன் திருமணத்திற்குப் பலவருடங்களுக்குப் பின்னர் மனைவிக்கும் பழைய காதலிக்கும் நடுவே தடுமாறி நிற்கிறான். அவன் அதிலிருந்து
எப்படி மீண்டான் என்பது தான் படத்தின் கதை” என்கிறார் சூரியகுமாரன்.
அன்றாட நிகழ்வுகளில் நடந்த விஷயங்களிலிருந்து இந்தக் கதையை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார் சூரியகுமாரன். இந்தக் காலத்தில் யார் பெற்றோர் பேச்சையெல்லாம் கேட்கிறார்கள்?