தெலுங்குப் பட ஹீரோக்கள் நேரடி தமிழ் என்ட்ரிக்கு முன்னர் தங்களது தெலுங்குப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாவதன் மூலம் தங்களுக்கு ஒரு மார்க்கெட் ஏற்படுவதை விரும்புகின்றனர்.
நானி நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நானி படம் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் டப் செய்யப்பட்டு வந்த ‘ஆஹா கல்யாணமும்’ பரவலான வரவேற்பு பெற்றது. தற்போது கோபிசந்த் நடித்து தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘வான்ட்டட்’ படத்தை இப்போது தமிழில் டப் செய்து வேங்கைப் புலியாக வெளியிட இருக்கிறார்கள்.
பெற்றோர் சம்பாதித்த சொத்துக்களில் ஜாலியாக வாழும் ஒரு இளைஞன் கோபிசந்த், பார்த்தவுடனே தீக்ஷாசேத் மீது காதல் கொள்கிறார்(பின்னே இப்படி கொளுக் மொளுக்குன்னு கொளுக்கட்டை மாதிரி இருந்தா காதல் வராதா பாஸ்). அந்தக் காதலுக்காக தன்னுடைய வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் இழக்க முன்வருவருகிறான். நாசர், பிரகாஷ்ராஜ்,
பிரம்மானந்தம் போன்றோர் நடித்துள்ள இப்படத்தை லஷ்மி லோட்டஸ் மற்றும் கோவை வேல் பிலிம்ஸ் இணைந்து வெளியிடுகிறார்கள்.