விண்கல் பூமியில் வந்து விழப்போவதையும் அதை தடுத்து உலகம் அழிவதை காப்பாற்றப் போவதையும் பற்றி ஹாலிவுட்டில் ‘டீப் இம்பேக்ட்’, ‘ஆர்மெக்டான்’ என்று நிறைய சையின்ஸ் பிக்ஷன் படங்கள் வந்திருக்கின்றன.
அதைப் போன்று ஒரு கதையை காமெடியாகத் தருவதுதான் அப்புச்சி கிராமத்தின் கதையாம். விண்கல் விழுந்து 10 நாளைக்குள் உலகம் அழியப் போகிறது என்ற செய்தியை நம்பி ஒரு கிராமத்தின் மக்கள் எல்லோரும் சாவதற்குள் ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்துவிடுவோம் என்று எல்லாவற்றையும் செலவழிக்கிறார்கள். ஆனால் உலகம் பத்துநாளில் அழியவில்லை. பின்னர் என்ன நடந்தது என்பதுதான கதை.
திருப்பூருக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் நடத்தினார்களாம். இதற்காக 23அடி உயரத்திற்கு விண்கல் தத்ரூபமாக தயார் செய்திருக்கிறார்கள். பிரவீன்குமார், சுஜா, அனுஷா, ஸ்வாதி நடிக்கின்றனர். புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்குகிறார்.