தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருந்த ஜோதிகா மொழி, சந்திரமுகி போன்ற படங்களில் நல்ல நடிகையாகவும் மிளிர்ந்தார். அந்த சமயத்தில் சூர்யாவுடன் இருந்த காதல் கனிந்து திருமணமாகி செட்டிலாகிவிட்டார்.
அதற்குப் பின் சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தும் நடிக்க அனுமதிக்கப்படவில்லை. சூர்யாவுடன் ஒரு காப்பி விளம்பரப் படத்தில் மட்டுமே நடித்தார். குடும்பச் சூழலுக்கு சென்ற நடிகைகள் பொதுவாக திரும்ப நடிக்க வருவதில்லை.
இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. குழந்தைகள் பற்றிய இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக கதாநாயகன் யாரும் கிடையாது. எனவே தான் இந்தப் படத்தில் ஜோதிகாவை நடிக்கவைக்க சூர்யா குடும்பத்தினர் சம்மதித்தனர் என்று கூறப்படுகிறது.