இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து மற்றுமொரு உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகிறார் . திரை கடலில் ‘கப்பல்’ என்ற தலைப்பு இட்ட படத்தை இயக்குவதன் மூலம் அறிமுகமாகும் அவரின் பெயர் கார்த்திக் ஜி க்ரிஷ் .
‘சிவாஜி’ மற்றும் ‘யந்திரன்’ ஆகிய படங்களில் இயக்குனர் ஷங்கரிடம் பணி புரிந்த கார்த்திக் தன்னுடைய ‘கப்பல்’ படத்தின் ‘லோகோவை அறிமுக படுத்தினார் . அதில் தெரியும் வண்ண கலவை படத்தில் வரும் எண்ணற்ற உணர்சிகளை படம் பிடித்து காட்டும்படி இருக்கும் என்றார் .
படத்தின் தலைப்பு ” கப்பல் ‘ , கதையின் போக்கையும் , கதையில் வரும் கதாபாத்திரங்களின் பயணத்தையும் எதிரொலிக்கும் என்றார் . . ஐ ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனம் , இந்த படத்தை தயாரிக்கிறது.