வாழ்க்கையில் தோல்வி என்பது பாடமே தவிர முடிவு அல்ல. மதிப்பெண்களின் பின்னாலே ஓடும்படி வளர்க்கப்படும் மாணவர்கள் எப்படி எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறமுடியும் ? வருடம் முழுதும் மனப்பாடம் செய்யும் பாடங்களை தேர்வு நாளில் ஒப்பிக்கும் முறையைக் கொண்ட கல்விமுறை
மாணவர்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும்? இத்தகையை முரண்பாடான தேர்வுமுறையில் தோல்வி பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை விளக்கும் படமாக வருகிறது ‘பள்ளிக்கூடம் போகாமலே’.
பெஸ்ட் ரிலீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் தேஜாஸ் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். கேரளாவில் நிஜமாகவே ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று ரேங்க் மாணவர்களில் ஒருவராக வந்த ஐஸ்வர்யா ராஜா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
ஜெயசீலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இயக்கும் இப்படத்தில் கவிஞர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் முக்கிய வேடத்தில் அறிமுகமாக இருக்கிறாராம்.