செல்வராகவனின் இரண்டாம் உலகம் நாற்பது கோடி ரூபாயில் நல்ல நல்ல ப்ரேம்களாக பளிச்சென்று படம் முழுவதும் இருந்தும் நல்ல கதையென்ற வஸ்து படத்தின் எந்த ப்ரேமிலும் தென்படாததால் படம் போட்ட வேகத்திலேயே தியேட்டரை விட்டு தூக்கவேண்டிய நிலை.
தற்போது தனது அடுத்த படத்தில் நடிக்க சிம்புவை ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வராகவன். படத்தை ரேடான்ஸ் மீடியா சார்பில் வருண்மணியன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு மதுஅம்பாட். இப்படத்திற்கு இசையமைக்க சிலகால இடைவெளிக்குப் பின் மீண்டும் யுவன்சங்கர் ராஜாவுடன் கூட்டு சேர்ந்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கும்முன் பாடல்கள் அனைத்தையும் முடித்துவிடும் எண்ணத்தில் யுவனுடன் வெளிநாடு சென்று பாடல்களை கம்போஸ் செய்ய இருக்கிறார்களாம். (வருண்மணியன் பர்ஸ் எடுத்தவுடனேயே வெளிநாட்டிலேயே காலியாகப் போகுது பாஸ்)
இப்படத்தில் சிம்புவின் ஜோடியாக நடிக்க இருப்பவர் த்ரிஷா. விண்ணைத் தாண்டி வருவாயாவுக்குப் பின் இப்படத்தில் சிம்புவுடன் நடிக்கிறார் த்ரிஷா. செல்வராகவனின் தெலுங்குப் படமான ‘ஆடவாரி மாட்லாகு அர்த்தலே வேறுலே’ (எலே என்ன தலைப்புலே ?) வில் த்ரிஷா நடித்திருந்ததைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அவரையே நடிக்க முடிவு செய்துள்ளார் செல்வராகவன்.
இந்த நிலையில் ஏற்கனவே இரண்டாம் உலகத்தில் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தயாரிப்பாளர்களான பிவிபிக்கு செல்வராகவன் திருப்பித் தந்த சில கோடிகள் போதாது இன்னும் பணம் திருப்பித் தரவேண்டும் என்று பிவிபி தரப்பு பிரச்சனையை கிளப்புகிறதாம். அதுவரை சிம்பு படம் ஆரம்பிக்க வாய்ப்பில்லை.