நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவுக்காக களமிறங்கி தானே படம் தயாரிக்கிறார். தனது தம்பிக்காக பெரிய இயக்குனர்கள் பலரிடம் சிபாரிசு செய்து பார்த்தும் சரியான ரோல்கள் எதுவும் அமையாததால் தானே முயற்சி செய்து தம்பிக்கு ஒரு என்ட்ரி கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டார் ஆர்யா.
படத்திற்கு இசையமைப்பவர் ஜிப்ரான். பாடல்களுக்கான வரிகளை எழுத இருப்பவர் பத்திரிக்கையாளர் வெற்றி்ச் செல்வன். படத்தின் பாடல்கள் தனக்குத் திருப்புமுனையாக அமையும் என்று ஜிப்ரானும், வெற்றி்ச் செல்வனும் உறுதியாகச் சொல்கிறார்கள். புதுமுக இயக்குனர் ஜீவா சங்கர் படத்தை எழுதி இயக்குகிறார்.
படத்தின் பெயர் அமரகாவியம். படத்தில் சத்யாவுக்கு ஜோடியாக மியா நடிக்கிறார். படத்தின் தலைப்புக்கேற்றார் போல மிக உன்னதமான காவியக் காதலைப் பற்றியதாம் கதை. இதைப் பாத்துட்டு இன்னும் பத்துபேரு ‘சேது’ மாதிரி பைத்தியம் பிடிச்சு அலையாம இருந்தா சரி…