Trisha-illai-nayan-news

இது வடிவேலின் புது டயலாக் அல்ல. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய ஜீ.வி. பிரகாஷ் குமார்,தற்போது நடித்துவரும் ‘பென்சில்’ஐத் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு படம். அந்தப் படத்தின் பெயர்தான் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’.

படத்தின் தலைப்பு உயிருடன் இருக்கும் நடிகைகளை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவது போல் இருப்பதால் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் நோ அப்ஜெக்ஷன் கடிதம் ஒன்று வாங்கித் தரும்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டார்களாம்.

இதற்காக ஜீ.வி.பி. த்ரிஷாவையும், நயனையும் தொடர்புகொண்டு கேட்க இருவரும் தாராளமாக பெயரை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்துவிட்டார்கள்.  

படத்தில் ஜீ.வி.க்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் ‘கயல்’ படத்தில் நடித்து வரும் ஆனந்தி. படத்தை எழுதி இயக்குபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் பாரதிராஜா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் அவருடைய மயிலு, ‘இங்கிலிஸ் விங்கிலீஸ்’ ஸ்ரீதேவி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.