பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களின் வெற்றிகளால் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட இம்ரான்கானுக்கு வரிசையாக தோல்விப் படங்கள் அமைந்துவிட்டன. இதனால் படவாய்ப்புக்கள் போய்விடும் என்பதை உணர்ந்த அவர் தற்போது புதிய திட்டத்தை கையாளுகிறாராம்.
படம் வெற்றிபெற்றால் படத்தின் லாபத்தில் ஐந்து முதல் பத்து சதவீதம் வரை கூடுதலாக பெற்றுக்கொள்ளுகிறார். அதே சமயம் படம் தோல்வியடைந்தால் சம்பளமாக வாங்கிய பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை திருப்பிக் கொடுத்தும் விடுகிறார்.
இவருடைய இந்த சமரசத்தால் தயாரிப்பாளர்கள் படம் தோல்வியடைந்தால் ஒரேயடியாக நொடித்துப் போகாமல் தப்பிக்க முடிவதால் தொடர்ந்து இவரை வைத்து படம் பண்ணவும் விரும்புகிறார்களாம். தமிழில் கூட இதுபோல நியாயமான விஷயத்தை ஒரு நடிகர் செய்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.