தெலுங்கில் சமந்தா மற்றும் ஸ்ருதிஹாசனால் மார்க்கெட் டல்லடித்த நிலையில் பாலிவுட்டுக்குச் சென்றார் தமன்னா. அஜய்தேவ்கனுடன் அவர் நடித்த ‘ஹிம்மத்வாலா’ என்கிற அவரது முதல் பாலிவுட் படம் தோல்வியைத் தழுவியது.
ஆனாலும் அதன் இயக்குனர் சஜ்ஜித் கான் அவருக்கு தனது அடுத்த படத்திலும் வாய்ப்பு கொடுத்துள்ளார். ‘ஹம்சகல்ஸ்’ என்கிற அந்தப் படத்தில் பிபாஷா, இஷா உட்பட மூன்று நாயகிகள். அதிலும் தமன்னாவுக்கே முக்கிய பாத்திரமாம். சயீப் அலிகானின் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா.
இப்படி இயக்குனர் தோல்விப் படத்துக்குப் பின்னும் தமன்னாவையே நாயகியாக போட்டிருப்பது குறித்து ‘காதலா ?’ என்று பாலிவுட்டில் கிசுகிசுக்க ஆரம்பிக்க இருவரும் ‘இல்லை எங்களுக்கிடையே நட்பு மட்டுமே’ என்று மறுக்கிறார்களாம்.