உத்தம வில்லன் படப்பிடிப்பு ஆரம்பித்து வேகமாக நடைபெற்று வருகிறது. 8ம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்குமிடையே பயணிக்கும் இப்படத்தில் கமல் 8ம் நூற்றாண்டில் ஒரு கூத்துக் கலைஞனாகவும் 21ஆம் நூற்றாண்டில் மனோரஞ்சன் என்கிற சூப்பர் ஸ்டார்(?!) நடிகராகவும்
இருவேடங்களில் நடிக்க இருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் கமலுக்கு ஆண்ட்ரியாவும், கூத்துக் கலைஞனுக்கு ஊர்வசியும் ஜோடிகளாக நடிக்கின்றனர். 8ஆம் நூற்றாண்டின் சர்வாதிகாரி முத்தரசனாக நாசரும், ஜேகப் ஜக்காரியாவாக ஜெயராமும் அவரது வளர்ப்பு மகளாக பார்வதி மேனனும் நடிக்கின்றனர்.
சொக்குச் செட்டியாராக எம்.எஸ்.பாஸ்கரும், 8ம் நூற்றாண்டில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக விஸ்வரூபம் பூஜாகுமாரும் நடிக்கின்றனர். இதுபோக கமலின் குருநாதர் பாலசந்தர் முதல் தடவையாக சினிமாவில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் கே.விஸ்வநாத் ஊர்வசியின் தநத்தையாக நடிக்கிறார். இப்படி பெரும் நட்சத்திரப் பட்டாளங்களுடன் களமிறங்கும் உத்தமவில்லன் தீபாவளிக்குள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஏற்கனவே வசந்தபாலன் தமிழ் நாடக இயக்க காலத்தையொட்டி எடுத்துவரும் சரித்திரப் படம்போல இப்படம் புராதன மற்றும் நவீன காலங்களில் சுழலும் கதையாக அறிவியல் புனைவு மற்றும் காமெடி படமாக இது உருவாகி வருகிறது.