வரிசையாக வந்த ‘போர்ன் ஐடண்டிட்டி’, ‘போர்ன் சுப்ரிமஸி’, ‘போர்ன் அல்ட்டிமேட்டம்’ படங்கள் ‘ஜேஸன் போர்ன்’ என்கிற கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஜேஸயன் பாத்திரமாக இது வரை நடித்து வந்தவர் மாட் டீமன்.
இப்போது அதன் நான்காவது பாகமான ‘போர்ன் லீகஸி’யை எடுக்க இருக்கிறார்கள். அதில் ஜேஸனாக நடிக்க மாட் டீமன் மறுத்துவிட்டார். அதனால் அவருக்குப் பதில் ஜெரெமி ரீனரை ஜேஸனாக நடிக்க வைத்து வெளியிட்டார்கள். பார்ன் லீகஸியும் பெறும் வெற்றியடைந்தது.
இப்போது படத்தின் ஐந்தாம் பாகத்தையும் ஜெரேமியையே வைத்து எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள். படம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகும் என்று சொல்லப்பட்டது. பின்னர் பல காரணங்களால் படம் இப்போது முடிவடையாது என்கிற நிலையில் அடுத்த வருடம் ஜூலை மாதம் தான் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.