gold-struck-movie-news

இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே எல்லைச் சண்டைகள், பொருளாதார ஆக்கிரமிப்புக்கள் என்று ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும் சினிமாவில் இந்தியாவையும், சீனாவையும் நல்லிணக்கத்தில் இணைக்க சிலர் முயன்றுவருகிறார்கள். இதில் மார்க்கெட்டிங் செய்து லாபம் ஈட்ட முடியும் என்கிற ஒரு

லாபநோக்கமும் இல்லாமலில்லை.

இந்தியாவின் நடனங்களையும், சீனாவின் மார்ஷியல் கலையையும் இணைத்தால் புதுவித சினிமா தரமுடியும் என்று நம்பி ‘லைட்ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ என்கிற நிறுவனம் சினிமா தயாரிப்பில் இறங்குகிறது. இந்த சினிமாவில் அமிதாப் பச்சனும், அபய் தியோல் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தில் சீனாவின் பக்கம் ஜாக்கிசானை நடிக்கவைக்க முயன்றுவருகிறார்களாம். படத்தின் பெயர் ‘கோல்ட் ஸ்ட்ரக்’. அமெரிக்கா போல சீனாவும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அடிமையாக்கி வருவது தெரிந்ததே. இதில் இப்போது இந்தி சினிமாவுக்குள்ளும் நுழைகிறார்கள்.

சீனாவின் குங்க்பூ மற்றும் நம் நாட்டின் குரூப் குத்து டான்ஸ்கள் போன்ற ‘கலைகளை’ இணைத்து புதுவகைப் படங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.  நீங்கள் ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.