‘சிவகார்த்திகேயன் நடிக்கும் தாணா’ படவேலைகள் தொடர்ந்து செல்லும் நிலையில் அடுத்த படமான ‘ரஜினி முருகன்’ம் ஆரம்பித்துவிட்டது. இப்படத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கராக வேஷ்டி, கூலிங் க்ளாஸ், அக்குளில் பேக்குடன் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றி நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தை இயக்கிய பொன்ராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். வ.ப.வா.சங்கத்திலும், கேடி பில்லா கி.ரங்காவிலும் இவருடன் இணைந்து நடித்த சூரி இப்படத்திலும் இணைந்து நடிக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக தயாராகிறது இந்தப் படம்.
இப்படத்தில் ஹீரோயின் தெருச்சண்டை போடும்போது அவரைப் பார்த்து சிவ.கார்த்தி காதல் கொள்கிறாராம். படத்தின் நாயகிக்கான மற்றும் இதர நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.