ayingaran-karuna-alli-raja

சுபாஷ்கரன் புள்ளிராஜா ஸாரி அல்லிராஜா இன்று கத்தி’ படத்தையும் விட பிரபலமான பெயர். ‘கத்தி’ படத்தை வைத்து மிரட்டியவர்களுக்கு நெத்தியடியாக ஆஃப்டர் ஆல் ‘கத்தி’ பட்ஜெட் எங்கள் நிறுவனத்தின் ரெண்டுநாள் டர்ன் ஓவர்’ என்று அசால்டு காட்டியவர். அந்த அசால்ட் அல்லிராஜாவே ஆட்டம் காணும் அளவுக்கு சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறதாம் அதுவும் அவரது பார்ட்னரான ஐங்கரன் கருணாகரனால்.

சுருட்டல் நடந்தது என்ன? என்கிற ரேஞ்சுக்குதான் இந்தப்பிரச்சினையை அணுகவேண்டியிருக்கிறது. என்னவாம்? அவ்வளவு பிசியான நபரான அல்லிராஜா, தனது பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் சென்னைக்கு விஜயம் செய்தார். இந்த விஜயமே தனக்கும் கத்திக்கு எதிராக இருப்பவர்களையும் ‘ஒரேயடியாக அமுக்குவது’தான்! அவர் நினைத்தபடியே முக்கியமான சந்திப்புகள் நிகழ்ந்தன. கத்திக்கு ஏதிரான கூர் மழுங்க வேண்டும் என்றால் எதிர்ப்பவர்கள் மயங்க வேண்டும். அதற்கான விஷயத்தை செய்யுங்க என்று இங்கிருக்கும் அவரது ’சுருட்டல்’ பார்ட்னரான கருணாமூர்த்தி ஐடியா கொடுத்தாராம்.

கோடிக்கணக்கான பணத்தை அவருக்கு டிரான்ஸ்பர் செய்தாராம் அல்லிராஜாவும். ஆனால்…. மொத்த பணத்தையும் தன் சிஷ்யகோடிகளுடன் சேர்ந்து அடித்துவிட்டாராம் கருணா. (ஹ்ம்ம்… பார்ட்னரிடமே பகல் கொள்ளை) இந்த தகவலை கருணாமூர்த்தியின் கொள்ளையில் கூட இருந்தே அனுபவித்தவர்கள், தங்களுக்கு கிடைத்த பங்கு சொற்பமே என்ற ஆதங்கத்துடன்  வெளியே பரப்பி வருகிறார்கள் கோடம்பாக்கத்தில். இது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக ‘கத்தி’ பாடல் வெளியீட்டு விழாவில் பல நான்சென்ஸ்கள் நடந்தேறின.

இது ஒரு புறமிருக்க, சுபாஷ்கரணுக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையே இருக்கும் தொடர்புகளை மீண்டும் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். அதில் சில புதிய ஆதாரங்களும் அடக்கம். (அந்த ஆதாரங்கள் கீழே) ‘ஏம்ப்பா… அவ்வளவு கொடுத்தேனே, மொத்தத்தையும் முழுங்கிட்டீங்களா? பிறகு ஏன் இப்படி மறுபடியும் பூதம் கிளம்புது?’ என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறாராம் சுபாஷ்கரண். அவரு இதெல்லாம் ஃபாலோ பண்ண மாட்டாருப்பா என்று அலட்சியம் காட்டிய கருணாவும் சிஷ்ய கோடிகளும் இப்போது என்ன பதில் சொல்வதென திகைக்கிறார்களாம்.

‘சுருட்டல் மன்னன்’ கருணாகரன் கழுத்தில் அல்லிராஜா எப்போது கத்தியை வைப்பாரோ என்று காணக்காத்திருக்கிறது ஒரு கூட்டம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.