பாரதிராஜா 60களில் தனது இளம் வயதில் ‘அல்லி கலா நாடக மன்றம்’ என்கிற நாடக அமைப்பை ஆரம்பித்து தேனி, அல்லி நகரம் பகுதிகளில் நாடகம் போட்டிருக்கிறார். 80 ரூபாய் இருந்தால் நாடகம் போட்டுவிடமுடியும் என்கிற நிலையில் 80ரூபாயை கஷ்டப்பட்டு அவரும் ஆர்.டி.பாஸ்கரும் சேர்ப்பார்களாம்.
பணம் சேர்ந்ததும் மேடை, மேக்கப், ஸ்க்ரீன் போன்றவற்றை ரெடி செய்து நாடகம் போட கிளமபிவிடுவார்களாம்.
அவர்கள் அவ்வளவு சிரமப்பட்ட காலத்தில் நிலக்கோட்டையில் தியேட்டர் வைத்திருந்த ராமானுஜம் தாராளமாக ஐம்பது ரூபாய் கொடுத்து உதவி செய்வாராம். அவர் கொடுக்கும் பண உதவிகளில் தான் நாடகங்கள் போடமுடிந்ததாம் அவர்களால்.
அப்படி அவர்கள் போட்ட ‘பாசறை பலிகடாக்கள்’, ‘ஓ நெஞ்சே’ போன்ற நாடகங்களுக்கு பண்ணைபுரத்திலிருந்து வந்து இசையமைத்தவர் தான் ராசையா என்கிற இளையராஜா. தங்களது சினிமா வாழ்க்கைக்கு உயிர்கொடுத்த பெரியவர் ராமானுஜத்துக்கு நன்றிக் கடனாக அவரது மகள் வழிப் பேரன் லட்சுமணனை தனது அன்னக்கொடி படத்தில் நாயகனாக நடிக்கவைத்தாராம் பாரதிராஜா.