டிஜிட்டல் யுகத்தில் படம் வெளியான இரண்டாவது நாளில் அதன் திருட்டு காப்பி இண்டர்நெட்டில் வெளியாகிவிடுகிறது. இது சுமாரான பட்ஜெட் படங்களையும், சுமாராக இருக்கும் படங்களையும் பாதிக்கிறது. பெரும் பட்ஜெட் மற்றும் பெரிய ஸ்டார் படங்களை தங்களது கௌரவத்திற்காக ஸ்டார்களே
தியேட்டர்களிலிருந்து தூக்கிவிடாமல் பாதுகாக்கும் நிலையும் தற்போது இருக்கிறது.
சூரியனான ஸ்டார் நடிகரின் சமீபத்திய அஞ்சாத படம் தமிழ்நாட்டின் தலைநகரத்தில் மட்டுமே 80 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. மற்ற பெருநகரங்களிலும் நகரத்தின் பத்து தியேட்டர்களில் எட்டு தியேட்டர்கள் என்கிற விகிதத்தில் திரையிடப்பட்டது. படம் இரண்டாவது நாளே டப்பா என்று உறுதியாகிவிட்டாலும் படத்தை தியேட்டரை விட்டு இரு வாரங்களுக்குத் தூக்கிவிடக்கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் ‘டீல்’ போடப்பட்டிருந்ததாம்.
இதுபோன்று படங்களை தியேட்டரில் திரையிடுவதில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க பலரும் பல புதுயுத்திகளை கையாள முயற்சிக்கின்றனர். கமல் விஸ்வரூபத்தை டிஷ்ஷிலும் லைவ்வாக வெளியிட முன்வந்தார். சேரன் “வீடுதோறும் சினிமா” என்ற பெயரில் படங்களை லோக்கல் கேபிள் சேனல்களின் மூலம் வெளியிடலாம் என முயற்சிக்கிறார்.
இதில் நடிகர் லாரன்ஸ் கையாளப் போகிற புது உத்தி என்னவென்றால் ஒரே டிக்கட் ஆனால் அதில் பாரக்கப் போவது இரு படங்கள் என்பதே அது. இடைவேளை வரை ஒரு படமும் இடைவேளைக்குப் பின் மற்றொரு படமும் திரையிடப்படுமாம்.
இப்படி அறிவித்த கையோடு அப்படி வெளியாகப் போகும் இரண்டு படங்களுக்கு பூஜையும் போட்டு ஆரம்பித்துவிட்டார் லாரன்ஸ். ஒரு படத்தின் பெயர் கிழவன். இன்னொரு படத்தின் பெயர் கருப்பு துரை. கிழவனின் நாயகி ஆண்ட்ரியா. கருப்பு துரையின் நாயகி லட்சுமி ராய்.
ஒரே டிக்கெட்டில் ரெண்டு படம்.. லாரன்ஸுக்கும் !!