இயக்குநர் பாலாவின் இயக்கத்தில்,அவரது பழங்கால சிஷ்யர் சசிக்குமார் ஹீரோவாக நடிக்க சரத்குமாரின் புத்திரி விஷால் லட்சுமி ஸாரி வரலட்சுமி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ‘தாரை தப்பட்டை’ படம் படப்பிடிப்புக்கு கிளம்பும் அறிகுறியே இல்லாமல் கிடப்பதால் பாலாவின் மீது வெறிகொண்டு அலைகிறாராம் சசி.
பாலாவைப்பற்றி ஆதியோடந்தமாய் அறிந்தவர் என்பதால் ‘அண்ணே ஒரு ரெண்டு வருஷத்துக்குள்ளயாவது படத்தை முடிச்சுட்டு என்னை அடுத்த படத்துக்கு அனுப்பிருங்க’ என்ற கோரிக்கையுடன் தான் தாரை தப்பட்டையில் நடிக்கவே ஒப்புக்கொண்டாராம் சசி.
தற்போது படம் தொடங்கி ஒரு வருடமாகியும் ஷூட்டிங் நடக்கும் தேதியே தெரியாமல், பாலா தரப்பிலிருந்து தக்க பதிலும் வராமல் பேசாமல் தாடியை தானம் கொடுத்துவிட்டு, வேறு படத்துக்கு தாவி விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம் சசி
படத்தின் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஜெயமோகனின் வசனங்களில் திருப்தி ஏற்படாததால் அவரை மீண்டும் மீண்டும் எழுதச்சொல்லி இம்சையைக் கொடுத்து வருகிறாராம் பாலா. கிழிஞ்சது ’தாரை தப்பட்டை’.