தமிழ்சினிமாவின் ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் எப்போதும் தனித்துவம் வாய்ந்த ஒரு இடம் அசோக் குமாருக்கு உண்டு. ‘முள்ளும் மலரும், ஜானி’ நெஞ்சத்தைக்கிள்ளாதே’ என்று பல்வேறு படங்கள் மூலம் தமிழர்களின் நெஞ்சத்தை அள்ளியவர் அவர்.

சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவரை சினிமாக்காரர்கள் யாரும் கண்டுகொள்லவில்லை. அதுவாவது பரவாயில்லை.மூன்று நாட்களுக்கு முன்பு,

அசோக்குமார் மரணத்தைத் தழுவினார் அல்லவா?அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த படவுலகிலிருந்து சென்றிருந்தவர்கள் இரண்டே இரண்டு பேர்தான் என்று கூறியிருக்கிறார் அசோக்குமாரின் மனைவி ஜோதி அகர்வால்.ஒருவர் எடிட்டர் லெனின்.இன்னொருவர் ஒளிப்பதிவாளர் ரவீந்தர்.மற்றவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்?இதுதான் கலையுலகம் ஒரு உன்னத கலைஞனுக்கு காட்டும் நன்றியா?
‘என் கணவர் பிஸியாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டிற்கு படவுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வருவார்கள்.ஆனால்,என் கணவருக்கு இறுதி மரியாதை செலுத்த யாருமே வரவில்லை-இரண்டு பேரைத் தவிர.நாங்கள் தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்தோம்.எங்களுக்கு ஏன் இந்த நிலை?’என்று கண்ணீர் மல்க கேட்கிறார் ஜோதி அசோக்குமார்.
ஏறத்தாழ ஒரு அனாதைக்கு நடத்தப்பட்டதைப்போல நடத்தப்பட்ட, ஒரு தேசிய விருதுபெற்ற கலைஞனுக்கு நடந்த இறுதி ஊர்வலத்தைப்பாருங்கள்.
இதற்கு சினிமாக்காரகள், குறிப்பாக அசோக்குமாருடன் பணியாற்றியவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்?

Related Images: