அந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என்று கமல் இன்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
‘ஒரு சண்டைக்காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தோம். அப்போது மேக்கப் சாதனத்துக்குப் பயன்படுத்த வைத்திருந்த ஒரு ரப்பர் துண்டு என் நாசிக்குள் சென்றுவிட்டது. அதை விரைவாக கவனமாக எடுப்பதற்காக, நான் போட்டிருந்த ரத்தக்காய மேக்-அப்புடன்,அப்படியே மருத்துவமனை செல்லவேண்டியதாகிவிட்டது. அதை தவறுதலாக புரிந்துகொண்ட சிலர் எனக்கு அடிப்பட்டுவிட்டதாக கதைகள் கட்டிவிட்டார்கள். நான் நலமாகவே இருக்கிறேன் என்பதை அடுத்த செய்திகள் வருவதற்கு முன்பு முந்திக்கொண்டு சொல்ல விரும்புகிறேன்’ என்று கமல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
‘அபிராமி… அபிராமி… அது என்ன மாயமோ தெரியலை. எனக்கு பட்ட அடி மட்டும் தன்னால ஆறிடுது… அபிராமி.. அபிராமி’ என்ற ‘குணா’ பட வசனம் ஞாபகத்துக்கு வருகிறது அல்லவா?