காரணம் ஊரறிந்த ஒன்றுதானே? ’ராவணன்’ துவங்கி ‘கடலில் விழுந்தது வரிசையாய் நாலைந்து ஃப்ளாப்கள், அதுவும் படாபடா பட்ஜெட்களில்.
இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கு டாப் ஸ்டார்களில் துவங்கி பாட்டம் ஸ்டார்கள் வரை முயற்சித்து, எவரும் வொர்க் அவுட் ஆகாமல் மனம் வெறுத்துப்போன மணி, இறுதியாய் மம்முட்டியின் புதல்வர், ‘ வாயை மூடிப்பேசவும்’ என்றொரு சில்வர் ஜூப்ளி கொடுத்தாரே, துல்கர் சல்மானிடம் சரணடைந்திருக்கிறாராம். நாயகி நித்யாமேனன். இவரும் முதலில் ‘அய்யோடா மணிரத்னமா?’என்று அலற அவரை சமாதானப்படுத்தி அழைத்துவந்தது சாட்சாத் துல்கராம்.
படம் ரிலீஸாகி வெற்றி பெற்றால் ஒழிய நம்மை யாரும் மதிக்கமாட்டார்கள் என்பதால் இப்படத்தின் படப்பிடிப்பை, வாயைமூடி மவுனரத்னமாகத்தான் நடத்தி வருகிறாராம்.

 
                    