’காங்கிரஸில் இணைந்து நாட்டுக்கு சேவைசெய்ய வாய்ப்பு கிடைத்திருப்பதன் மூலம் சொந்த வீட்டுக்கு வந்திர்ப்பது போல் உணர்கிறேன்’- பல்வேறு ‘சுதந்திர போராட்டங்களில் பங்குபெற்றவரும், அன்னை ‘சோனி’யாவின் வலதுகரத்தை வலுப்படுத்த வந்தவருமான குஷ்பூ காங்கிரஸில் சற்றுமுன்னர் இணைந்தவுடன் வெளியிட்ட கருத்து இது.
திமுகவில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு, சிலபல நாட்களாய் திக்குத்தெரியாத காட்டில், அரசியல் கிக்குகள் எதுவுமின்றி பரிதாபமாய் வலம் வந்த குஷ்புவுக்கு இப்படி காங்கிரஸில் இணையும் ஐடியாவைக்கொடுத்தது காமெடி நடிகர் கார்த்திக் முத்துராமன் தானாம்.
‘நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்’ இதுதான் குஷ்புவுக்கு கார்த்திக் பாடி அனுப்பிய பாட்டாம்.
ஏற்கனவே ஒரு தடவை காங்கிரஸ் ஆபிஸுக்குப் போயி பயங்கர காமெடி பண்ணுனீங்களே.. அது போதாதா? மறுபடியும் முதல்ல இருந்தா?