’ஒரு பொண்டாட்டிய வச்சி சமாளிக்கிறதுக்கே மனுஷன் என்ன பாடு படவேண்டியிருக்கு. ‘அநேகன்’ படத்துல ஏழெட்டு பொண்டாட்டிகளோட வேலை பாத்தமாதிரியே இருந்துச்சி’ என்று ஆனந்த சங்கடத்தைப் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் கே.வி. ஆனந்த்.
‘படத்துமேல உள்ள அக்கறையில என் படத்தோட மெயின் டெக்னீஷியன்கள் அத்தனைபேரும் ரொம்ப மெனக்கெட்டாங்க. எழுத்தாளர்கள் சுபாவுல தொடங்கி ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் வரைக்கும் எப்பவும் ஆளாளுக்கு பொண்டாட்டி மாதிரி மாத்திமாத்தி, ஒரு ஐடியா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. வீட்டுல சொந்த பொண்டாட்டி கூட படுத்திருக்கப்ப, மற்ற பொண்டாடிகள் சொன்ன யோசனைகள்தான் ஒவ்வொண்ணா ஓடிக்கிட்டிருக்கும். அதையெல்லாம் சரியா பயன்படுத்தி இந்தப்படத்தை என்னோட மத்த படங்களை விட சிறப்பா பண்ணியிருக்கேன்’ என்றார் ஆனந்த். இது நடந்தது ‘அநேகன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில்.
அக்கறையெல்லாம் ஓ.கேதான். ஆனா சொந்தப்பொண்டாட்டி கூடப் படுத்திருக்க மத்த பொண்டாட்டிகளைப் பத்தின யோசனை வந்தா சங்ங்ங்கட்டமா இருக்காது?