’கத்தி’ படக்கதை திருட்டு வழக்கை மீஞ்சூர் கோபி வாபஸ் வாங்கினாலும் வாங்கினார், அவரை ஆதரித்தவர்கள் பலரும் ஃபியூஸ் போன பல்பு போல ஆனார்கள்.
1. கோபி மிரட்டப்பட்டு வழக்கை வாபஸ் வாங்கியிருக்கவேண்டும்.
2, பெரும்பணம் பெற்றுக்கொண்டு அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மெண்ட் ஆகியிருக்கவேண்டும்.
3.தற்போது சொல்லப்பட்டுவருவது போல், வழக்கை இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக்க வாபஸ் வாங்கியிருக்கவேண்டும்.
இதில் மூன்றாவது சொல்லப்பட்ட காரணம் நம்பத்தகுந்ததாய் இல்லை.
இந்நிலையில் கோபி கதையை திருடிய விவகாரம் குறித்து இதுகாறும் மவுனம் காத்த அமுக்குனி முருகதாஸ், நேற்று மெல்ல மீடியாக்களுக்கு வாயைத்திறக்க ஆரம்பித்திருக்கிறார். ‘கோபி பொய் சொல்கிறார் என்பது இப்போது கோர்ட்டில் நிரூபணமாகிவிட்டது. இந்த தீர்ப்பு வருவதற்காகத்தான் நான் இவ்வளவு நாளும் மவுனம் காத்தேன். ஆனால் என்னை அநியாயத்துக்கு மீடியாக்களிடம் அசிங்கப்படுத்திய கோபியின் மீது விரைவில் மான[அதெல்லாம் நமக்கு இருக்காங்க?] நஷ்ட வழக்கு தொடருவேன்’ என்று எதிர்ப்பாய்ச்சல் காட்டுகிறார் முருகதாஸ்.
ஆனால் தீர்ப்பு வந்த நாளிலிருந்து போனை பெரும்பாலும் ஸ்விட்ச் ஆஃப் மோடில் வைத்துவிட்டு ஆதரவாளர்களிடமிருந்து கூட அந்நியமாக நிற்கிறார் கோபி.