’வாயைத்தொறந்தாலே வம்பாக எதையாவது பேசி, பின்னர் அதற்காக வசமாக வாங்கிக்கட்டிக்கொளவது இயக்குநர் மிஷ்கினுக்கு வாடிக்கை. அதுவும் உதவி இயக்குநர்களைப் பற்றி சதாசர்வகாலமும் குதர்க்கமான கமெண்ட் அடித்து,பின்னர் அதற்காக சாஷ்டாங்க மன்னிப்புக்கோரி பல்டி அடிப்பார்.
இதோ லேட்டஸ்ட் வம்பு மிஷ்கின் தனது அலுவலகத்தில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஸ்டைலில் மாட்டியிருக்கும் போர்டு. 2015 செப்டெம்பர் வரை உதவி இயக்குநர் வேலைக்கு ஆட்கள் தேவையில்லை. அதனால இம்ம்மாம்பெரிய போர்டு மட்டியிருக்கேன். அதைப்பாத்துட்டு பேசாம ஓடிப்போயிடு’ என்று சொல்லாமல் சொல்கிறது அந்த போர்டு.
இப்பதான் உதவி இயக்குநர் வேலைதேடுறவங்கள்ல 90 சதவிகிதம் பேரு ஸ்ட்ரெயிட்டா குறும்படம் எடுக்கப்போயிடுறாங்களே?’ முந்தி மாதிரி நிறையபேர் வேலைகேட்டு வந்து தொந்தரவு பண்றதில்லையே அப்புறம் என்னத்துக்கு இவ்வளவு பெரிய பில்டப்பு மிஷ்கின் பெரியப்பு?” ஒருவேளை படத்துக்கு ‘பிசாசு’ன்னு பேர் வச்சதால அதுவாவே ஆயிட்டீங்களோ?’