இன்று காலை சத்யம் திரையரங்கத்தில் நடந்த ‘லிங்கா’ ஆடியோ வெளியீட்டுவிழாவில் ஏகப்பட்ட குளறுபடிகள். நிகழ்ச்சி நடந்த சத்யம் திரையரங்கம் தவிர்த்த மற்ற திரையரங்குகளில் அந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யும் எண்ணத்தில் வளாகத்தின் அத்தனை தியேட்டர்களிலும் ரசிகர்களைக் குவித்துவிட்டனர். ஆனால் அந்த நேரடி ஒளிபரப்பு படுசொதப்பலாக இருந்ததால் கடுப்பான ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகத்தையும், அதன் மேனேஜர் முனிகன்னையாவையும் கடுமையான கெட்டவார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர்.

விழாவின் முக்கிய ஹைலைட்  பப்ளிகுட்டி மன்னன் அமீரின் பேச்சுதான். எந்த மேடையில் எதைப்பேசினால் அது மறுநாள் தலைப்புச்செய்தியாக வரும் என்ற விவரத்தை அறிந்த அவர் ரஜினி மேடை கிடைத்தால் விடுவாரா? அதுவும் ‘லிங்கா’ டைட்டிலை ரஜினிக்கு தாரை வர்த்துக்கொடுத்தவர் என்ற அடிசனல் தகுதியும் இருக்கும்போது, அமீரின் அலப்பறைக்கு ஒரு அளவு இருக்குமா என்ன?’

‘தலைவா இந்த தமிழ்நாடே உங்களை நம்பி கதியா காத்துக்கிட்டிருக்கு. நீங்க ம்ன்னு சொன்னா முதல்வர் நாற்காலி உங்க பின்னாடி ஓடி வரும். [அம்மா வீட்டுக்குள்ள முடங்கியிருக்காங்கற தைரியம்?] நீங்க முதல்வரா வந்தே ஆகனும்’ என்று நீண்ட நேரப்பேச்சின் மூலம் அடம் பிடித்தார் அமீர்.

‘லிங்கா’ ரிலீஸ் வரை இந்தப்பரபரப்பு ரஜினிக்கு மிகத்தேவையான ஒன்றாக இருக்கிறது. எனவே அமீரின் பேச்சை ரொம்பவும் தான் ரசித்துக்கேட்டார் ரஜினி.

அப்படி ரஜினி ஆட்சியைப் புடிச்சா உங்களுக்கு ஏதாவது ஒருமினிஸ்டர் போஸ்ட் கண்டிப்பா காத்திருக்கு அமீர் பாய்.

Related Images: