கௌதம் மேனனின் ‘என்னை அறிந்தாலி’ல் வித்தியாசமான வில்லனாக நடிக்கிறார் அருண் விஜய். நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்துள்ள இந்த வாய்ப்புக்காக மிகவும் உழைக்கிறாராம் அருண் விஜய்.
கடந்த ஆறு மாதங்களாக சிவகுமார் எனும் ட்ரெய்னர் உதவியோடு ‘ஜிம்’மில் தினமும் ஆறு ஏழு மணி நேரங்கள் செலவிட்டு தனது உடலை சிக்ஸ் பேக் அமைப்புக்கு கொண்டு வந்திருக்கிறார் அருண்.
ஹெவியான புரோட்டின் உணவு எடுத்ததுடன் ஷூட்டிங் நாட்களிலும் விடாமல் ஷூட்டிங் முடிந்த பின் இரவு நேரங்களில் பயிற்சியை தொடர்ந்திருக்கிறார். பொங்கலில் ரிலீஸாக இருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் வந்தால் ‘ஜிம்’மில் அவர் பட்ட கஷ்டம் நடிப்பிலும் பட்டாரா என்பது தெரிந்துவிடும்.