பல்வேறு பட விழாக்களில் அங்கீகாரமும் அந்தஸ்தும் ஈன்ற ‘குற்றம் கடிதல்’ படத்துக்கு சென்ற வாரம் கோவாவில் நடந்த 45ஆவது இந்தியன் பனோரமா விழாவில் சிறப்பு அந்தஸ்தாக சிவப்பு கம்பளம் விரிக்க பட்டது.
இதற்கனவே குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா.ஜி ,தயாரிப்பாளர் ஜே எஸ் கே, மற்றும் பட குழுவினர் கோவாவுக்கு சென்று இருந்தனர். பிரத்தியேகமான சில படங்களுக்கு மட்டுமே கிடைத்த அந்த வரவேற்பில் ‘குற்றம் கடிதல் ‘ படமும் ஒன்று.
கடந்த வருடம் ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படத்துக்காக இதே நிறுவனம் இந்த அந்தஸ்தை ஈன்றது குறிப்பிடத்தக்கது.
“தொடர்ந்து இரண்டாவது வருடமாக நான் தயாரித்த படங்கள் இந்த மரியாதைக்கான சிறப்பு வளையத்தில் வருவது எனக்கு மிக்க பெருமை. முன்னரே தெரிவித்தது போலவே இந்த பெருமை நல்ல தரமான தமிழ் படங்கள் வர உழைக்கும் எல்லோருக்கும் சமர்ப்பணம்” என்றார் ஜே.சதீஷ் குமார்.
படத்தை இப்பவே பாக்கனும் போல இருக்கே.. சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்க பாஸ்..