‘தியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் குறித்து வண்டி வண்டியாய் குற்றச்சாட்டுகளை கொட்டித்தீர்த்து தனது ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை நேரடியாக டி.வி டி மூலம் மக்களுக்கு கொண்டு செல்லப்போவதாய், கடந்த ஒரு வருடமாய் கதைத்துக்கொண்டிருந்த சேரன் இன்று ஒரு அறிக்கை மூலம் அந்தர்பல்டி அடித்தார்.
அவர் இன்று அவசர அவசரமாய் அனுப்பியிருக்கும் அறிக்கையில்’தற்போது திரைப்பட சூழலை புரிந்துகொண்டார்கள்’ என்ற சப்பைக்கட்டோடு, வரும் 15-ம் தேதியன்று டிவிடியாக வீடு தேடி வருவதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டதென்று அறிவித்திருக்கிறார்.சேரனுக்கு திடீரென்று தியேட்டர் அதிபர்கள் மீதும் விநியோகஸ்தர்கள் மீதும் இவ்வளவு அக்கறை வந்தது என்பதற்கான காரணம் ‘லிங்கா’ லாபமா நஷ்டமா? என்பதை விடவும் குழப்பமாக இருக்கிறது.
இவ்வளவு காலமும் கேவிக்கேவி கூவியது இப்படி மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கவா சேரன்? இந்த திட்டத்தை நம்பி பணமுதலீடு செய்து ஆறுமாதங்களுக்கும் மேலாக காத்திருப்பவர்களின் கதி?
குத்துங்க எசமான குத்துங்க…
இது சேரனின் அறிக்கை