முன்ன ஒரு காலத்துல ஆரம்பிக்கப்பட்ட எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படம் வரும் 30 வெள்ளியன்று திரைக்கு வருகிறது. அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ 29-ம் தேதியிலிருந்து பிப்-5க்கு தள்ளப்பட்டதால் அந்த ஒரு வார கேப்பில் நாம கெடா வெட்டிக்கொள்ளலாமே’ என்ற எண்ணத்தில் இப்படி ஒரு திடீர் ரிலீஸ் முடிவை எடுத்தாராம் சூர்யா.

சதை’ப்பிடிப்பான செக்ஸ் காட்சிகளுக்கும் டபுள் மீனிங் வசனங்களுக்கும் பேர் போன சூர்யா இந்த முறை கையில் எடுத்திருப்பது ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் மத்தியில் உள்ள ஈகோ விவகாரத்தை என்கிறார்கள். படத்திற்கு இசையும் அவரேதான்.

அவர் ஹீரோவாக நடிப்பதை ஏற்றுக்கொள்ளாமல்தான் பெரிய கேப்பு வைத்தார்கள் தமிழக ஜனங்கள். இப்போது  ‘அதுக்கும் மேல போய் இசையமைக்கும் பணியையும் ஏற்றுக்கொண்டிருப்பதால் என்ன ஆகப்போகிறார் என்று இன்னும் 5 தினங்களில் பார்த்துவிடலாம்.

Related Images: