பேசி ரொம்ப நாள் ஆச்சு… எந்த டாபிக் எடுத்தாலும்… எட்டு என்ன… ஏழரையே போட்டு காட்டுவார்… இவர்கிட்ட சினிமா மட்டும்தான் நமக்கு பேச தெரியும்… சரி அப்படியே ‘என்னை அறிந்தால்’ படம் பற்றி கேட்டு நம்ம நட்ப தூசி தட்டிகலாம்னு ஃபோன் செய்தால்… “நீங்க தொடர்பு கொண்ட விவேக் தற்சமயம் பிசியாக மட்டுமல்ல, பசியாகவும் உள்ளார்” என்று தனது வழக்கமான பாணியில் ஆரம்பித்தார்… நீங்க சாப்பிட்டு முடிச்சு ஃபிரியா இருக்கும் போது கூப்பிடுரோம் சார் என்றேன்… “சொல்லுங்க அட விளையாட்டுக்கு சொன்னங்க” என்று சிரித்தார்… சிரிப்பின் சுவாரஸ்யத்தில் நலம் விசாரிப்பு முடித்து… கேள்விகளை நழுவ விட்டோம்.
“விவேக் சார் டேட்ஸ் இல்லாத நிலையில்தான் விண்ணைதாண்டி வருவாயா படத்தில் வி.டி.வி கணேஷ் நடித்தார்” என்று சமிபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் கூறியுள்ளார். உங்களிடம் இதை பற்றி கூறியுள்ளாரா… அந்த படத்தை நடிக்க முடியாமல் போனது வருத்தப்பட்டதுண்டா…?
வி.டி.வி. கணேஷ்க்கு நல்ல பெயர் கிடைத்தது மகிழ்ச்சிதான்… ஆனால் நான் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம் தான்… ஆனால், எப்போ கௌதம் என்னிடம் கேட்டார்??? ஒருவேளை நான் மறந்திருப்பேன்!!!
மின்னலே இயக்குனர் கௌதம் மேனன் இப்பொழுது ‘என்னை அறிந்தால்’ இயக்குனர் கௌதம் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள் ?
மின்னலே- கௌதம் 13 வருடம் சின்னவர்; புதியவர் பரபரப்பும், படபடப்பும் உள்ளவர்.
என்னை அறிந்தால் – கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; பக்குவம் வந்திருக்கிறது. அனால் அதே அன்பு. ‘ஆடி’ காரில் வருகிறார்.
உங்க படங்களில் நீங்கள் வழக்கமா வரும் கூலர்ஸ் டி-ஷர்ட் போட்ட ஹீரோவின் நண்பன் கெட்டப் போல இல்லாமல் என்னை அறிந்தால் படத்தில் சற்று வேற கெட்-அப்ல லைவ்லியா வரிங்களே…. உங்க கதாபாத்திரத்தை பற்றி சொல்லுங்களேன்?
இந்த படத்தில் ஒரு சீரியசான , குசும்புமிக்க கதாப்பாத்திரம்; சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும். எடுத்த காமெடி காட்சிகளில் எத்தனை எடிட்டர் ஆண்டனியின் கத்திரிக்கு தப்பிக்கிறதோ… ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
‘காதல் மன்னன்’ ஷிவா, ‘என்னை அறிந்தால்’ சத்யதேவ் உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பன் யார்?
ஷிவா – துடிப்பான ‘காதல்’ மன்னன்
சத்யதேவ் – பொறுப்பான ‘காவல்’ மன்னன்
இருவரும் நல்ல நண்பர்களே…
ட்விட்டர், பேஸ்புக்ன்னு அஜித் சார் ரசிகர்கள் எங்கும் உள்ளார்கள். சமூக வலைதளங்களில் அவர்களுடன் ஏற்பட்ட ஏதேனும் ஒரு அனுபவம்?
ஐயோ!!! ‘தல’, ‘தல’ ன்னு அலறும் அவர் மேல் வெறிபுடித்த ரசிகர்கள். நான் என்னை அறிந்தால் நடிக்க தொடங்கியதில் இருந்து, ‘என்ன கதை ?’, ‘ தல எப்படி இருக்கார்??னு கேட்டே கொன்னுப்புட்டாங்க… பாசக்கார பசங்க…
இருவார்த்தைகளில் திரிஷாவை பற்றி கூறுங்களேன்.
இனிமை, பெண்மை – திரிஷா
அனுஷ்காவை பற்றி இருவார்த்தைகள்…
அழகு, அறிவு – அனுஷ்கா
தீவிர பெரியாரின் கொள்கையை பேசிய நீங்கள்… இப்பொழுது பாபா வின் தீவிர பக்தராமே?!.
பெரியாரின் சாதி ஒழிப்பு , பெண் கல்வி, மூட நம்பிக்கை போன்றவற்றை படங்களில் சொல்லி இருக்கிறேன்.
முரட்டுதனமான, முட்டாள் தனமான மதம் வேண்டாம் என்கிறேன் அவ்வளவுதான்.
‘என்னை அறிந்தால்’ படம் உங்க கேரியரில் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும்?
ஷூட்டிங்கில் எடுத்ததெல்லாம், படத்தில் இருந்த எடுத்துவிடாமல் வைத்தால்… என் கேரியரில் முக்கியமான படமாய் இருக்கும். அஜித்தின் அன்புக்கு நன்றி…