மிகக்குறுகிய காலத்தில் மூன்றாவது திருமணம், அதுவும் இஸ்லாம் மதத்துக்கு மாறி, அப்பா அண்ணனுக்கு கூட அழைப்பு இன்றி என்று யுவன் ஷங்கர் ராஜா திருமணம் குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள்.

இதுகுறித்து மவுனம் சாதித்துவந்த யுவன், அந்தளவுக்கு மிகவும் ரகசியமாக நடந்த அந்த திருமணத்தைப் பற்றியும், ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினேன் என்பதற்கான ரகசியத்தையும் தற்போது உடைத்திருக்கிறார்.

பணக்கஷ்டம் வந்தால் கூட கடனை வாங்கியாவது சமாளித்து விடலாம். மனக்கஷ்டம் வந்தால் அதை எப்படி சமாளிப்பது? இப்படி ஒரு நிலையில் தான் இருந்தாராம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

”என் தாய் ஜீவா மரணத்திற்கு பின், வெறுமையை உணர்ந்தேன். மதினாவில் இருந்து கொண்டு வந்த விரிப்பு பாயை, எனக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர் ஒருவர் கொடுத்தார். மனக்கஷ்டம் ஏற்படும் போது அதில் அமர்ந்து, குரான் படிக்கும் படி கூறினார்.

அதன்படி செய்த பின், மனதளவில் ஏற்பட்ட மாற்றம் தான் இந்த மதமாற்றம்” என்று கூறியிருக்கிறார் யுவன்.

யுவனின் இந்த சொந்த வாழ்க்கைப்பிரச்சினைகள் அவரது சினிமா மார்க்கெட்டை பெருமளவு பாதித்திருக்கிறது என்று அவரே நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

சீக்கிரமே சகஜ நிலைக்குத் திரும்பி, பழைய ஃபார்முக்கு வாங்க யுவன் பாய்’.