நித்தியானந்தா ரஞ்சிதா படுக்கையறைக்காட்சிகள் புளித்துப்போன கதையாகிய நிலையில் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது ஒரு டப்பிங் திரைப்படத்தின் மூலம்.
மதன் பட்டேல் என்ற கன்னடத்தயாரிப்பாளர்’ யாரவனு’ என்ற பெயரில் ரஞ்சி-நித்தி லீலைகளை படமாக்கி பரபரப்பாக வெளியிட்டிருந்தார். நித்தியின் ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அப்படம் ரிலீஸானது.
இப்போது அதே படத்தை தமிழில் ‘சொர்க்கம் என் கையில்’ என்ற பெயரில் ரிலீஸ் செய்கிறார்கள். மதனே தயாரித்து இயக்கி, நடித்து இசையமைத்திருக்கும் இந்தப்படம் ரிலீசுக்கு ரெடியாகி விட்ட நிலையில் நித்யானந்தா கும்பல்கள் மதனுக்கு போன் போட்டு மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
‘சொர்க்கம் என் கையில்’ படத்தை நீ தமிழ்ல ரிலீஸ் பண்ணக்கூடாது என்று மிரட்டல்களோடு நீ நாசமாப் போயிடுவே… என்று சாபமும் விடுகிறார்கள் என்று கொந்தளித்திருக்கிறார் தயாரிப்பாளர் மதன்.
இதோடு இந்த விவகாரத்தை நான் விடப்போவதில்லை. என்னுடன் போனில் பேசியவர்களின் வாய்ஸை ரெக்கார்டு பண்ணி வெச்சிருக்கேன். அவங்க மேல கமிஷனர் ஆபீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போறேன் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
படத்தின் அனைத்து ஏரியா உரிமைகளை வாங்கி துட்டு பார்ப்பதை விட்டுவிட்டு ஏன் புத்தி கெட்டு அலைகிறது இந்த நித்தி.