கடந்த இரண்டு மூன்று நாட்களாக ‘Must Watch Shamitabh’ என்றுதான் அமிதாப், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தை பலரும் ஃபேஸ்புக்கில் கொண்டாடி வருகிறார்கள் .
ஆனால் அந்தப்படத்தை வட இந்திய ஊடகத்தினர் ஒருவர் கூட இந்தளவுக்கு புகழவில்லை.
வழக்கம் போல தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை போன்ற முக்கிய பிரச்சனைகளில் வட இந்திய ஊடகங்களின் மனநிலை எப்படி இருக்குமோ? அப்படித்தான் ஷமிதாப்பை ஆதரிக்கும் விஷயத்திலும் இருக்கிறது.
இங்கிருந்து இளையராஜா, தனுஷ், பால்கி என்கிற மூன்று தமிழர்கள் பாலிவுட்டில் பிரபலமாவதை வட இந்திய ஊடகங்கள் விரும்பவில்லை என்பதை அவர்களது விமர்சனங்களில் அப்பட்டமாக காண முடிகிறது.
என் டிடிவி, ஹங்கமா, சிஎன் என் ஐபின் போன்ற பெரும்பாலான முன்னணி வட இந்திய ஊடகங்கள் ஷமிதாப்புக்கு வெறும் ரெண்டு ஸ்டார்களும், ரெண்டரை ஸ்டார்களும் தந்திருக்கின்றன. ஒரே ஒரு அமிதாப்புக்காக மூன்று தமிழர்களை அங்கு வளரவிட அவர்கள் விரும்பவில்லை போலும்.
நாம்தான் இசைஞானியையும், தனுஷையும் அமிதாப்பையும் கொண்டாடுகிறோம். ஆனால் வட இந்திய ஊடகங்களோ அமிதாப்பை மட்டுமே விமர்சனங்களில் அதிகப்பட்சம் கொண்டாடுகின்றன.
அதிலும் சில வட இந்திய ஊடகங்கள் இளையராஜாவின் பெயரைக் கூட விமர்சனங்களில் குறிப்பிடவில்லை. அவருடைய இசையைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.
இந்த உண்மையை யோசிக்காமல் ஒரு ஹிந்திப்படமான ஷமிதாப்பை நிஜத்தை மீறி நாம் தூக்கி வைத்துக் கொண்டாடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.
மாறாக வட இந்திய ஊடகங்கள் கொண்டாடினால் தான் கலெக்ஷனை அள்ளி அட்லிஸ்ட் போட்ட முதலீடாவது திரும்ப வரும்.
இப்படிப்பட்ட வட இந்திய ஊடகங்களின் நிஜ முகத்தை புரிந்து கொள்ளாமல் ஷமிதாப்பை நாம் கொண்டாடுவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு சமம்.
ப்ளீஸ் நிஜத்தை புரிந்து கொள்ளுங்கள்!
கருத்து; முகநூல் ஆய்வாளர் சக்திவேல் Sakthi Vel