திரையுலகத்தில் கதாநாயகிகள் சில வருடங்களே நிற்கின்றனர். அவர்கள் புகழின் உச்சியில் இருக்கும்போது ஊடகம் மற்றும் ரசிகர்கள் என அனைவரது பார்வையும் அவர்களை சுற்றியே இருக்கும். அவர்களே கால போக்கில் வாய்ப்பில்லாமல் இருக்கும்பொழுது ஒருவரும் அவர்களை
திரும்பி பார்ப்பதில்லை. அத்தகைய தருணத்தில் அவர்கள் அந்த புகழை திரும்பி அடைவதில் பெரும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ‘கள்ளப் படம்’ திரைபடத்தில் அப்படி பிரச்சனைகளை சந்திக்கும் ஒரு நாயகியாக நடிக்கிறார் ‘சுட்டகதை’ லக்ஷ்மி ப்ரியா.
அறிமுக இயக்குனர் வடிவேல். ஜே. படத்தைப் பற்றி கூறுகையில், “லக்ஷ்மி ப்ரியா மிக நேர்த்தியான நடிகை. இப்படத்தில் லீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதாப்பாத்திரம் லக்ஷ்மி ப்ரியா செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். நான் நினைத்தது போலவே கச்சிதமாகப் பொருந்தினார். இந்தக் கதாப்பாத்திரம் படத்தில் தன் சூழ்நிலையை மாற்ற பல தைரியமான முடிவுகளை எடுக்கும்.“ என்று கூறினார்
“வடிவேல் சார் இந்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றி கூறும்பொழுதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிப்பதற்கு வாய்ப்புள்ள ஒரு கதாப்பாத்திரம். இந்தக் கதாப்பாத்திரம் இல்லாமல் கதையில்லை என்றளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல். எனக்கு நந்திதா தாஸ் அவர்களை போல் தைரியமான
கதாப்பாத்திரங்களில் நடிக்க பிடிக்கும். நான் நடிக்கும் லீனா கதாப்பாத்திரம் அத்தகைய ஒரு தைரியமான பெண் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.” எனக் கூறினார் லக்ஷ்மி ப்ரியா.