தமிழ்சினிமாவில் இது பேய் சீசன் போலும். ‘மைனா’, மற்றும் “சாட்டை, மொசக்குட்டி” ஆகிய படங்களைத் தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ் தயாரித்து வரும் ‘சவுகார் பேட்டை’.
தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து துவண்டு கிடக்கும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க அவருடன் ஜோடி சேர்கிறார் லட்சுமிராய்.மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய் ரேகா ஆகியோர் நடிக்கிறார்கள்.
‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தை இயக்கிய வடிவுடையான் இப்படத்தை இயக்கி வருகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,
“இந்த படத்தில் ஸ்ரீகாந்த் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரம் மந்திரவாதி. நாயகியாக நடிக்கும் ராய் லஷ்மி பல பங்களில் நடித்திருக்கிறார். ஆனால், முதன் முறையாக ‘மாயா’ என்ற பேய் வேடத்தில் நடிக்கிறார். பேய் பிடித்து, தானும் ஆடி, மற்றவர்களையும் ஆட்டிப் படைக்கும் திகிலான கதாப்பாத்திரம் அவருக்கு,” என்கிறார் இயக்குனர்.
சும்மா பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் லட்சுமிராய்க்கு, பேய் வேடம் போட அதிக மேக்கப் செலவுகள் ஆகவில்லை என்பது உபரித்தகவல்.