சில வாரங்களாக செய்திகளில் அவ்வளவாக அடிபடாமல் இருந்த த்ரிஷா மறுபடியும் தலைப்புச்செய்திகளில் இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சுமார் 13 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் கோலோச்சு வரும் த்ரிஷாவுக்கு  தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவே திருமணத்தை தள்ளிபோட்டுக்கொண்டே வந்தார்.

அவருக்கு பிறகு பீல்டுக்கு வந்த சிம்ரன், ஜோதிகா, ரம்பா என பல முன்னணி நடிகைகளும் திருமணம் செய்து கணவர், குழந்தைகள் என சந்தோஷமாக குடும்பம் நடத்தும் போது த்ரிஷா மட்டும் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்கிற கேள்வி அடிக்கடி கோடம்பாக்கத்தில் எழும்.

இடையில் அவ்வப்போது கூட நடிக்கும் நடிகர்களுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட த்ரிஷா பிரபல தெலுங்கு நடிகர் ராணாவை மட்டும் காதல் திருமணம் செய்யப்போகிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பின. இருவரும் அடிக்கடி நைட் பார்ட்டிகளுக்கு ஒன்றாகப் போய் வந்ததற்கான போட்டோ ஆதாரங்களும் வெளியாகின.

இந்த நிலையில் தான் திடீரென்று சென்னையைச் சேர்ந்த கட்டுமான அதிபர் வருண்மணியனை த்ரிஷாவுக்கு நிச்சயம் செய்தார் அவருடைய தாயார் உமா.

சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் அதையொட்டி 7 ஸ்டார் ஹோட்டலில் நெருங்கிய நண்பர்களுக்கு ‘சரக்கு பார்ட்டி’ என உற்சாகத்துடன் திருமணத்துக்கு தயாரானார் த்ரிஷா.

இந்த ஆண்டுக்குள் த்ரிஷா – வருண்மணியன் திருமணம் நடக்கும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் திடீரென்று இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

த்ரிஷா – வருண்மணியன் இருவருக்குமிடையே பல விஷயங்கள் ஒத்துப் போகவில்லை என்றும், கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும், அதனால் இருவரும் சீக்கிரமே பிரிந்து விடுவார்கள் என்றும் கொளுத்திப் போட்டிருக்கின்றன தெலுங்கு மீடியாக்கள்  . அதற்கு ஆதாரமாக வருண்மணியன் வாங்கிக்கொடுத்த காஸ்ட்லியான நிச்சயதார்த்த வைரமோதிரத்தை தனது விரலில் த்ரிஷா போடவில்லை என்ற தகவலை சொல்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் ரிலீசான ‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். இதனால் தான் தனது திருமணத்தை இன்னும் சில வருடங்கள் தள்ளிப்போட திட்டமிட்டிருக்கிறார் த்ரிஷா என்கிறார்கள். இத ஒட்டி திருமணம் குறித்து த்ரிஷா சைலண்டாக இருந்து வந்தது வருண்மணியனுக்கு வெறியை ஏற்றிவிட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்.

ஸோ இருவரும் பிரியும் செய்தி எந்நேரமும் அதிகாரபூர்வ அறிவிப்பாக வரலாம். த்ரிஷா ரசிகக்கண்மணிங்க ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க..

Related Images: