அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா இயக்குனர் விஷ்ணுவர்தன் ஆர்யாவை வைத்து இயக்கி வரும் படமான யட்சனின் வேலைகள் பெரும்பாலும் முடிவு பெற்றுவிட்டன.

ஆர்யா, க்ருஷ்ணா( விஷ்ணுவர்தனின் தம்பி இவர்), தீபா சன்னதி, ஸ்வாதி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன், காமெடி, நட்பு, காதல் என்கிற வழக்கமான சினிமா மசாலா படமாக இது உருவாகிறது. படத்தின் கதை, இரட்டை எழுத்தாளர்கள் ‘சுபா’ ஒரு இதழில் தொடராக எழுதி வெளிவந்த கதை.

ஆர்யாவுடன் ஐந்தாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது பற்றி கேட்டபோது…’ஒவ்வொரு படத்தில் ஆர்யாவுடன் வேலை செய்யும் போதும் அவர் அடுத்த ப்ராஜக்ட் எப்போது ஆரம்பிக்கலாம் என்றும் விவாதிக்க ஆரம்பித்துவிடுவார்.. அப்படியே நிறைய படங்களும் செய்துவிட்டோம்’ என்றார் விஷ்ணுவர்தன்.

படம் மே அல்லது ஜூனில் வெளியாகும் என்கிறார்கள்.