நயன்தாராவின் நண்பர்கள் லிஸ்டில் புதிதாக இடம்பிடித்திருப்பவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். நயனின் முன்னாள் நண்பரான சிம்புவை வைத்து `போடா போடி` என்ற படத்தை இயக்கியவர்தான் இந்த சிவன்.
சிம்புவுக்கும் நயனுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டபோது பரிசல் ஓட்டிக்கொண்டு தூதுபோனவர் இந்த சிவன். இப்போது ரொம்பவும் நெருக்கமாகி எப்போது திருமணம் செய்துகொள்வார்களோ என்கிற அளவிற்கு தீவிரமாகிவிட்டார்களாம்.
தற்போது `விஜய்சேதுபதியுடன் நயன் நடிக்கும் `நானும் ரவுடிதான்` படத்தை இயக்கிவரும் விக்னேஷ் சிவன், படம் முடிந்ததும் நயனுக்கு அதிகாரபூர்வமாக தாலிகட்டப்போகிறாராம் என்கிற வதந்தி நொண்டியடிக்கிறது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் இருவரும் நாங்கள் வெறும் நண்பர்கள் தான் ஜென்டில்மென் என்று சொல்லிவருகிறார்கள்.