கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசின் பட்ஜெட் 26ம் தேதி வெளியிடப்பட்டது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா பட்ஜெட்டை வெளியிட்டார். பெரும் பில்டப் கொடுத்து ஏழைகளுக்கு ஆப்பு அடித்த மோடி அரசின் ஏமாற்று பட்ஜெட் போல் அல்லாமல் நிஜமாகவே ஏழை மற்றும் நடுத்தர மக்களை நோக்கிய பட்ஜெட்டாக இது இருக்கிறது.
இந்தியாவின் ‘சுதேசி பட்ஜெட்’ என்று இதைக் குறிப்பிட்ட நிதியமைச்சர் இதில் எல்லா மக்களின் கல்விக்காகவும், மருத்தவத்திற்காகவும் பெரும் கவனம் செலுத்தியிருப்பதாகக் கூறினார். பட்ஜெட்டின் சில ஹைலைட்டுகள் கீழே..
1. ரூ. 9036 கோடி கல்விக்காக. இருக்கும் 1011 பள்ளிகளில் 50 பள்ளிகளை மாடல் பள்ளிகளாக உருவாக்கத் திட்டம்.
2. 20 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம். அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமிராக்கள். அரசு பள்ளி மைதானங்களில் காலனிச் சிறுவர்களும் பயன்படுத்த ஏற்பாடு.
3. முறையாய் செயல்படாத தனியார் பள்ளிகள் மேல் கடுமையான நடவடிக்கை.
4. அரசு கல்லூரிகளில் டிப்ளமா படிப்புக்கள் தொடக்கம். மாணவர் சேர்க்கை 100 பேர் அதிகப்படுத்தப்படல். எல்லா கல்லூரிகளிலும் இலவச வை-பை 50 கோடி செலவில்.
5. மருத்துவத்திற்கு ரூ.4,787 கோடி. வார்டுகளில் 1000 அரசு மருத்துவ மையங்கள் திறக்கப்படும். இதில் 500 மையங்கள் இந்த ஆண்டே திறக்கப்படும்.
6. ரூ.5085 கோடி போக்குவரத்திற்கு. 1380 தாழ் தள பேருந்துகள், 500 மினி பஸ்கள், 1000 அடுக்கு பஸ்கள் வாங்கப்படும். 1200 புதிய பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்படும்.
7. எல்லா அரசு பஸ்களிலும் பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
8. ரு.927 கோடி அரசு ஊழியர்களின் நலனுக்காக. போலீஸ், காவல் படை மற்றும் ராணுவ ஊழியர்கள் பணியின் போது இறந்தால் அவர்களின் குடும்பத்துக்க ஒரு கோடி ரூபாய் இழப்பீடு (ஊழியர்களோ , தொண்டர்களோ இறந்தால் பிச்சாத்து 3 முதல் 5 லட்சம் வரை தரும் தமிழ்நாட்டு கட்சிகள் கவனிக்க).
இது போக சாராயக்கடை லைசென்ஸ்கள், தியேட்டர், கேபிள் டி.வி, சொகுசு ஹோட்டல்கள் போன்றவற்றின் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
பட்ஜெட்டின் பற்றாக்குறையை சமாளிக்க புது வரிகள் போடாமல் வாட் வரி விதிப்பை முறைப்படுத்துவதன் மூலம் பணம் திரட்ட முடிவு செய்துள்ளார்
கேஜ்ரிவால்.
இப்ப சொல்லுங்க ஆம் ஆத்மியின் பட்ஜெட் .. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டா இல்லையா ?