‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித் தற்போது சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சிவா ஏற்கனவே இவரது  ‘வீரம்’ படத்தை இயக்கியவர்.

தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்போது ஒரு சண்டைக் காட்சியில் அடிபட்டு அஜித்தின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவர்கள் உடனடியாக வந்து அஜித்துக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நன்கு ஓய்வு எடுக்கும்படி அஜித்திடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஓய்வெடுத்துக் கொள்ளலாம். ஆனால், படப்பிடிப்பை ரத்து செய்தால் தயாரிப்பாளருக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுமே என்று சொன்ன அஜித், அரை மணி நேரம் ஓய்வு போதும் என்று விட்டு, தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

பைக்கில் ரேஸ் போவதும் அதில் விழுந்து அடிபடுவதும் பிறகு தேறிவருவதும் சகஜமாகிப் போனதால் ‘தல’ இப்படி ஈசியாக எடுத்துக் கொண்டார் என்கிறார்கள்.

Related Images: