காதலிக்க ஆரம்பித்தவர்களுக்கு காதலியை கவர்வது எப்படி, அவருக்கு விருப்பமானவற்றை கண்டுபிடித்து செய்வது எப்படி என்று காதல் டிப்ஸ்கள் தரும் டேட்டிங் மொபைல் ஆப்கள்(mobile Apps) பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது வந்திருக்கும் காதலியை கழட்டி விட ஹெல்ப் செய்யும் மொபைல் புதுசு.
இதன் பெயர் பைண்டர்(Binder). இந்த ஸ்மார்ட் போன் ஆப் மூலம் உங்க காதலியை வெறுப்பேத்தலாம். முடிவாக கை கழுவி விடலாம். அதே போல காதலனை கைகழுவ விரும்பும் காதலிகளும் இதை பயன்படுத்தலாம். எப்படி?
இதில் உங்க பாய்ப்ரண்ட் அல் கேர்ள்ப்ரண்ட் பெயர், வயது, பாலினம் அப்புறம் அவரது மொபைல் நம்பரை என்டர் செய்துவிடவேண்டும். அப்புறம் என்றைக்கு அவரை வெறுப்பேத்தனும்னு தோனுதோ அன்னிக்கு இந்த ஆப்பை ஸ்டார்ட் பண்ணிவிட்டால் போதும். உடனே இந்த ஆப் நீங்கள்
அனுப்புவது போல பிரிவு மெஸேஜ்களை உங்க பா.அல்.கே. ப்ரண்ட்டுக்கு அனுப்ப ஆரம்பித்துவிடும்.
“அன்பே.. உனது கனவுகளை நீ அடைய வேண்டுமென்றால் நீ என்னை விட்டு பிரிந்து பறந்து போவது தான் நல்லது.. பட்டுப்பூச்சியே என்னை விட்டுப் போ” என்று கண்ணீருடன் பிரியும் மெஸேஜ்கள் முதல் ‘டே.. கஸ்மாலம் இனிமே உன்னை என் வழில பார்த்தேன்.. தொலைச்சிடுவேன் ‘ வரையிலான டெரர் மெஸேஜ்கள் வரை உங்கள் விருப்பப்படி மெஸேஜ்கள் உங்கள் பார்ட்னருக்கு வரிசையாக செல்ல ஆரம்பிக்கும். அப்புறம் என்ன? காதலுக்கு கட்
தான்.
நீங்க பாட்டுக்கு தண்ணிய போட்டுட்டு இல்லாட்டி சும்மா உங்க பார்ட்டிய வெறுப்பேத்த இதை யூஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் உங்க காதல் கப்பல் டைட்டானிக்கா கவுந்தா கம்பெனி பொறுப்பாகாது..