தண்ணீர் பஞ்சம் கோடை காலங்களில் தலைவிரித்தாடும் இந்தியா, மழை நீரை சேகரித்தாலே மக்களுக்கு வருமானம் கொழிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
நாசாவும் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் 1997 முதல் 2015 வரை இந்தியாவின் மழைப் பொழிவு பற்றிய புள்ளி விவரங்களை ஆய்ந்து இதை கண்டு பிடித்துள்ளார்கள். பெங்களுர், டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களை
ஒப்பிட்டு இந்த முடிவுகளை அடைந்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
உடா யுனிவர்சிட்டியைச் சேர்ந்த டான் ஸ்டௌட் என்பவர் கூறுகையில்.. ஒவ்வொரு மனிதருக்கும் சராசரியாக ஒரு நாளைக்கு 140 லிட்டர்கள் நீர் தேவைப்படும். 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு 700 லிட்டர் தேவைப்படும். வீட்டுக்கு வெளியே தோட்டம் வளர்க்க இதை விடக் குறைவாகவே நீர்
செலவாகும். மழை நீர் சேகரிப்பின் மூலமாக ஒரு குடும்பத்துக்கு தேவையான நீரில் 20 சதவீதமும், அத்துடன் தோட்டத்துக்கான நீரும் எளிதில் கிடைத்துவிடும்.
இதன் மூலம் ஒரு நபருக்கு தோட்டத்தில் வளரும் காய்கறிகளை விற்பதன் மூலம் ஆண்டுக்கு மூவாயிரம் ருபாய் முதல் 5 ஆயிரம் வரை லாபமும் கிடைக்கும். இதைத்தான் 36 வயதினேலே படத்துல நம்ம ஜோவும் சொல்லியிருக்காங்க.. யாரு கேக்குறாய்ங்க?