நீங்கள் காஸ்ட்லியான ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்துபவரா ? அது சாம்சங் கேலக்ஸி வகை அல்லது ஆப்பிள் ஐபோன் மாடலா ? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.
சுமார் 60 கோடி சாம்சங் மொபைல் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் தங்களின் மொபைலை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஸ் 6 மாடல் மொபைல் உள்ளிட்ட சாம்சங் மொபைலில், குறிப்பிட்ட சில பட்டன்களை அழுத்தினால், அவர்களின் மொபைலை யார் வேண்டுமானாலும் எளிதாக ஊடுருவி விட முடியுமாம்.
லண்டனில் பிளாக் ஹெட் செக்யூரிட்டி அமைப்பு நடத்திய மாநாட்டில் ரேயன் வெல்டன் என்ற பாதுகாப்பு ஆய்வு நிறுவனம், சாம்சங் மொபைல்கள் எவ்வாறு ஊடுருவலாளர்களால் (Hackers) எந்தெந்த வகைகளில் எல்லாம் ஊடுவப்படுகிறது என்பது செய்து காண்பித்தது. இதில், சாம்சங் பயன்பாட்டாளர்கள் “ஷிப்ட் கீ” யை அழுத்தினாலே ஊடுருவலாளர்கள் அவர்களின் மொபைலுக்கு ஊடுவி விட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.
இதே போல ஆப்பிள் ஐபோனுக்காக உருவாக்கப்பட்ட மால்வேர்கள(malware) ஆப்பிளின் செக்யூரிட்டியை எளிதில் ஏமாற்றி நல்ல சாப்ட்வேராக உள்ளே புகுந்துவிட முடியும் என்று இந்தியானா யுனிவர்சிடியில் கண்டுபிடித்துள்ளார்கள்.
இவ்வாறு ஊடுருவும் ஊடுருவலாளர்கள் ஜி.பி.எஸ்., கேமிரா, மைக்ரோபோன் உள்ளிட்ட சென்சார்கள் மட்டுமின்றி அவர்கள் பாதுகாப்பிற்காக வைத்துள்ள மாலிசியஸ் அப்ளிகேஷனைகளையும் பயன்படுத்தி விட முடியும். அதுமட்டுமல்ல அந்த மொபைல் எவ்வாறு செயல்படுகிறது, என்னென்ன அப்ளிகேஷன்கள் உள்ளன, போனில் இருந்து செல்லும் அழைப்புக்கள், வரும் அழைப்புக்கள், மெசேஜ்கள், பாஸ்வேர்டுகள், படங்கள் உள்ளிட்ட அனைத்து விபர்களையும் போனில் இருந்து ஊடுருவலாளர்கள் எடுத்து விட முடியுமாம்.
ஷிப்ட் கீ பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் சாம்சங் மொபைல்களை ஊடுருவி விட முடியும் எனவும் செய்முறையில் காண்பிக்கப்பட்டுள்ளது. தங்களது மொபைல்கள் ஊடுவப்படுவதாக பல சாம்சங் வாடிக்கையாளர்கள் அந்நிறுவத்திடம் புகார் தெரிவித்துள்ளனராம். இதற்கு முக்கிய காரணம் இந்த போன்களில் இருக்கும் கீபோர்டு சாப்ட்வேர் தானாம். இதனால் இதனை சரிசெய்யும் நடவடிக்கைகளில் சாம்சங்க் தற்போது இறங்கி உள்ளதாம்.